கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – ஒருவர் பலி – 600 க்கும் மேற்பட்டோர் தப்பியோட்டம்!

Wednesday, June 29th, 2022

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுவரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், அங்கிருந்து 600 க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தப்பி ஓடியவர்களை தேடி, காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். சம்பவத்தில் தெமோதரை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தடுத்துவைக்கப்பட்டிருந்த அறைகளில் கம்பிகளை உடைத்துக்கொண்டு அவர்கள் தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது, நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 998 பேர் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தப்பியோடியவர்களைக் கண்டுபிடிக்க விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: