கண்ணீர் அஞ்சலி!

Tuesday, April 6th, 2021

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நம்பிக்கைக்குரியவர்களுள் ஒருவருமான தோழர் குணாளன் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.

இந்நிலையில் அன்னாரின் பிரிவுத்துயரில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் பங்கெடுத்துக் கொள்கின்றது.

கொழும்பு அவிசாவளையை பிறப்பிடமாகவும் கரம்பன் மேற்கு ஊர்காவற்றுறையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசு சிவகுமார் என்னும் இயற்பெயருடைய தோழர் குணாளன் இன்று அதிகாலை உடல்  நலக்குறைவு காரணமாக தனது 49 ஆவது வயதில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

அன்னாரது இறுதிக் கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.

Related posts: