கண்டி வன்முறைச் சம்பவத்தின் எதிரொலி: உலக நாடுகள் பயண எச்சரிக்கை! 

Thursday, March 8th, 2018

இலங்கையின் கண்டிப் பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் மற்றும் அவசரகாலச் சட்ட அறிவிப்பு தொடர்பில் உலகின் பல்வேறு நாடுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.

பிரித்தானியா வெளிவிவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இலங்கையின் கண்டி மற்றும் அம்பாறை பகுதிகளில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களால்அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளை பிரித்தானிய மக்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டங்கள்,பொதுக்கூட்டங்கள், உள்ளிட்டவைகளை பிரித்தானிய பிரஜைகள் பார்வையிடுவதை கைவிட வேண்டும் எனவும் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளின் எச்சரிக்கைகளை கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் அந்த செய்திக் குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்கா தங்கள் நாட்டு பயணிகளுக்கு எதிர்வரும் நாட்களில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்கு உத்தரவு அதிகரிக்கலாம் என எச்சரிக்கைவிடுத்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலிய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தங்கள் நாட்டு மக்களுக்கு இலங்கையில் சில நாட்களுக்கு அவுஸ்திரேலிய மக்கள் கவனமுடன் இருக்குமாறும் இலங்கைஅதிகாரிகள் குறிப்பிட்டுள்ள பகுதிகளை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: