கண்டி நிகழ்வு தொடர்பில் விசாரணை!
Wednesday, November 29th, 2017கண்டி கண்ணுருவ என்ற இடத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் 250 மாணவர்களை பங்குகொள்ள செய்ததன் மூலம் அந்த மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக இதுதொடர்பான விசாரணை நடைபெற்றது. விசாரணையின் பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
1995ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க குற்றவியல் பிரிவிற்குட்பட்டதான 308ஆவது சரத்து (அ) அமைவாக வழக்கு தொடரக்கூடியமை குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் சட்டமா திணைக்களத்திடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைவாக இதுதொடர்பிலான நடவடிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையில் 2 இலட்சம் வெளிநாட்டு பணியாளர்கள்!
தூக்குத் தண்டனை முடிவைக் கைவிட வேண்டும் - பன்னாட்டு நீதிபதிகள் ஆணையம்!
சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் தகவல்கள் உண்மையானவையல்ல - இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமச...
|
|