கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் பணம் அறவிடும் வங்கிகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்!

சில வங்கிகளினால் கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்படாமல் பணம் அறவிடப்படும் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த வங்கிகள் எடுக்கும் தவறான முடிவுகளை தடுக்க எதிர்காலத்தில் சட்டங்கள் சிலவற்றை முன்மொழிய எதிர்ப்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர மேலும் தெரிவித்துள்ளார்.
எவருக்கும் மற்றொருவரின் கணக்கில் இருந்து அவர்களுக்கு அறிவிக்காமல் ஒரு சதத்தினை கூட எடுக்க முடியாது. எனக்கு தெரியும் சில இடங்களில் இவ்வாறான விடயங்கள் இடம்பெறுகின்றன. அவ்வாறான விடயங்களுக்கு எதிராக நாம் செயற்பட வேண்டும் என்றுமு; அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வினைத்திறன்மிக்கதாக சமுர்த்தி இயக்கம் மாற்றப்படும்- ஜனாதிபதி!
கால எல்லை இன்று நள்ளிரவுடன் நிறைவு : மீறினால் நடவடிக்கை - பரீட்சைகள் திணைக்களம் !
இந்தியாவில் வாழும் ஈழ அகதிகள் வாக்களிக்கக் கோரினால் பரிசீலிக்கப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப...
|
|