கணக்காய்வு சேவையில் 40% வெற்றிடங்கள் – கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவிப்பு!

Saturday, March 9th, 2024

கணக்காய்வு சேவையில் 40% வெற்றிடங்கள் காணப்படுவதாக கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனால், சில விசேட கணக்காய்வு நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்க​மைய அரச சேவையில் தற்போதுள்ள பட்டதாரிகளிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான போட்டிப் பரீட்சை விரைவில் நடத்தப்பட்டு 465 வெற்றிடங்களுக்கான புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


மின் விநியோக மார்க்கங்களின் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின் த...
இறக்குமதியான 30 ஆயிரம் தொன் சேதன பசளை நேற்றையதினம்முதல் பிற மாவட்டங்களுக்கு விநியோகம் – அமைச்சர் மகி...
தொழில் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கான காலத்தை நீடிக்க ருமேனிய அரசாங்கத்துடன் கலந்துரையாடல் – இரா...