கட்டைக்காட்டு பகுதியில் பதற்றம்!

Thursday, June 16th, 2016

கிளிநொச்சி கட்டைக்காட்டு கடற்பரப்பில் தொழிலில் ஈடபட்டுக்கொண்டிருந்த அப்பகுதி கடற்றொழிலாளர்களுக்கும் தென்பகுதி கடற்றொழிலாழர்களுக்கும்; இடையே எற்பட்ட முறுகல் நிலையை அடுத்து அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது அங்கு பதடட்டமான சூழ்நிலை நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்மைய சில நாட்;களாக கட்டைக்காட்டு கடற்பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். இதுதொடர்பாக துறைசார்ந்த அரச அதிகாரிகளுக்கு பல தடவைகள் தெரியப்படுத்தியிருந்தும் அவர்கள் பாராமுகமாக இருந்ததாகவும் இதன்காரணமாகவே இன்றைய தினம்  இருதரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நிலைமையை சமாளிக்கும் நோக்கில் பொலிஸார் வரவழைக்கப்பட்டு இருதரப்பினருக்கம் இடையிலான சமரசத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை அது ஏற்படுத்தப்படவில்லை என எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


சட்டவிரோத மீன்பிடியிலீடுபட்ட 32 மீனவர்கள் கைது!
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் குருதிக்கொடை!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!
அரசியல் கைதிகளுக்கான சிறந்த ஆயுதம் தகவலறியும் சட்டமூலம்!
ஓய்வு பெற்ற ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு!