கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக யாழில் அரிசி விற்பனை அதிகரிப்பு!

Saturday, March 4th, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரிசி வகைகளை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யாத வர்த்தகர்கள் தொடர்பான முறைப்பாடுகளை யாழ்ப்பாண பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையிடம் அறிவிக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் இணைப்பதிகாரி வசந்தசேகரம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்கள் கட்டுப்பாட்டு விலைக்கு விற்கப்படுவதில்லை என்ற முறைப்பாடுகள் அதிகரித்த வண்ணமுள்ளன. அதிலும் அரிசி வகைகள்தான் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது என அதிக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உற்பத்தியாளர்கள் அவ் அரிசி பொதிகளில் விலையை காட்சிப்படுத்துவதில்லை. இதன் காரணமாகவே விற்பனையாளர்கள் அதிக விலைக்கு அரிசி வகைகளை விற்பனை செய்யக்கூடிய சந்தர்ப்பம் அமைந்துள்ளது.

மேலும் விற்பனை நிலையங்களில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தல் அவசியமாகும். அத்துடன் விற்பனை விலை நிலவரம் காட்சிப்படுத்தப்பட வேண்டும். முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் நேரடியான எமது உத்தியோகத்தர் பிடிக்கப்படும் பட்சத்தில் குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் முறைப்பாடுகளை 021 775 5455 மற்றும் 021 321 9000 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு அவர் மேலும் அறிவித்தார்.

Tamil-Daily-News_58800470830

Related posts: