கட்டுப்பாட்டின் கீழ் கார்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை உருவாக்க வேண்டும் – வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் கோரிக்கை!

ஒரு கட்டுப்பாட்டின் கீழ் கார்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை உருவாக்க வேண்டும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் துலதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் அடுத்த ஆறு மாதங்களுக்கு விற்பனை செய்யும் அளவுக்கு தேவையான கார்கள் மாத்திரமே விற்பனையாளர்களிடம் கையிருப்பில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கார் இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்த பின், பதிவு செய்யப்படாத கார் ஒன்றின் விலை சுமார் 10 இலட்சம் ரூபாவால் அதிகரித்தது.
இதனடிப்படையில் பதிவு செய்த வாகனங்களின் விலையும் குறிப்பிடத்தக்களவு அதிகரித்து எனவும் துலதுங்க குறிப்பிட்டுள்ளார்.
சாதாரணமாக இலங்கைக்கு ஒரு மாதத்தில் சுமார் மூவாயிரம் முதல் நான்காயிரம் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும். இலங்கையின் வாகன இறக்குமதியாளர்களிடம் கையிருப்பதாக 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கார்கள் இருந்தன.
எனினும் கடந்த மார்ச் மாதம் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டதன் காரணமாக அடுத்த ஆறு மாதங்களில் நாட்டின் வாகன சந்தையில் வாகனங்கள் இருக்காது. நாட்டுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்த எடுத்த தீர்மானத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.
அந்தவகையில் ஒரு கட்டுப்பாட்டின் கீழ் கார்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை உருவாக்குவது முக்கியமானது எனவும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் துலதுங்க மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|