கட்டுப்பாடு தளர்வு தொடர்பில் மீள் பரிசீலனை வேண்டும் – அரச வைத்தியர்கள் சங்கம் வலியுறுத்து!
Monday, July 26th, 2021நடமாட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது பின்பற்றவேண்டிய முறைமை தொடர்பில் மீள பரிசீலிக்க வேண்டும் என அரச வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த சங்கம், டெல்டா திரிபானது அடுத்துவரும் மாதங்களில், நாட்டில் பிரதான வைரஸ் திரிபாக மாறக்கூடிய அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
மேலும் பொதுமக்கள் ஒன்றுகூடும் எண்ணிக்கை ஆகக் குறைந்தது 50 க்கும் 60 க்கும் இடையில் மட்டுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் இல்லையெனின், பொருத்தமான வகையில் தற்போதைய எண்ணிக்கையை விட குறைந்த மட்டத்தில் அந்த எண்ணிக்கை இருக்க வேண்டும் எனவும் அரச வைத்தியர்கள் சங்கம் யோசனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முழுமை பெறவுள்ள அனலைதீவு பகுதிக்கான மின்சார விநியோகம்!
வடக்கில் இன்று வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்!
வவுனியாவில் குடும்பமொன்றை சந்தித்து சென்ற பெண்ணுக்கு கொரோனா !
|
|