கட்டுப்பாடின்றித் தொடரும் வன்முறைகுள் சிக்கித் தவிக்கும் குடாநாடு – பரிகாரம் காணப்படுமா என மக்கள் ஏக்கம்!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் வாள்வெட்டு குளுக்களின் அடாவடிதங்கள், கூலிக்காக கொலைகள் என்பதுடன் கொள்ளைக் கும்பல்களின் அட்டகாசங்களும் தலைவிரித்தாடும் நிலையில் மக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நேற்று வரையான காலப்பகுதிக்குள் மட்டும் சுமார் பத்திற்கும் மேற்பட்ட வாள்வெட்டு திருட்டு கொலை முயற்சி தீவைப்பு போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
வாள்வெட்டுக் கும்பல்கள் பட்டப் பகலில் கூட உலாவந்து இவ்வாறான வன்முறைகளில் ஈடுபட்டபோதும் கூட இவ்வாறான கும்பலைச் சேர்ந்த ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இதனால் சட்டம் – ஒழுங்கு பேணவேண்டியவர்கள் மீது யாழ்ப்பாண மக்கள் முற்றுமுழுதாக நம்பிக்கை இழந்துள்ள நிலை தோன்றியுள்ளது.
நேற்று முன்தினம் கொக்குவில் ஆறுகால்மடம் புதவீதி உள்ளிட்ட பகுதிகளில் வாள்வெட்டுக் கும்பல்கள் பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதேபோன்று நேற்றும் கொக்குவில் வண்ணார்பண்ணை வட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் வாள்வெட்டுக் கும்பல்கள் பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன் பல இலட்சம் ரூபா பொருட்களை திருடியுள்ளன. அத்துடன் பல இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களும் சேதம் விளைவித்துள்ளன.
இதனைவிட கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ் நகர் நல்லூர் கோண்டாவில் உடுவில் உடுப்பிட்டி என பல்வேறு இடங்களில் ஒரே இரவில் வாள்வெட்டுக் கும்பல் பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டது. வர்த்தகர்கள் மற்றும் வீதியால் சென்ற மக்களை மிரட்டி கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்தி இந்தக் கும்பல் பாரிய கொள்ளையில் ஈடுபட்டது. இவ்வாறு வன்முறைகள் அதிகரித்து வருவதால் குடாநாட்டு மக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
வன்முறைக் கும்பல்கள் மிகச் சொற்ப அளவினரே இவ்வாறு பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் இவ்வாறான குழுக்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் தயங்குவது குறித்து பொதுமக்கள் பெரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Related posts:
|
|