கட்டுப்படுத்த முடியாது தவிக்கும் அமெரிக்கா: கொரோனாவால் ஒரே நாளில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பேர் பாதிப்பு!
Tuesday, March 31st, 2020கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 12 ஆயிரத்து 478 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 61 ஆயிரத்தை கடந்துள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த டிசெம்பர் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள சமார் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இதனால் தற்போது வரையில் 782,000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆரம்பத்தில் சீனாவில் மாத்திரம் கொரோனா வைரஸ் தாக்கிய போதிலும், தற்போது ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் அதன் வீரியம் அதிகரித்துள்ளமையால் பல நாடுகள் தடுமாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|