கட்டுப்படுத்தக் கூடியது கொரோனா – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!
Friday, March 13th, 2020உலகம் முழுவதும் ‘கோவிட்-19’ என்ற கொரோனா உயிர்க் கொல்லி நோய் பரவி வருகிறது. நோய் தடுப்பு முறைகளை உலக சுகாதார அமைப்பு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் ஜெப்ரேயிசஸ் ஜெனீவாவில் உலக நாடுகளின் தூதர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், ‘கொரோனா வைரஸ் பெருந்தொற்று. அனைத்து நாடுகளும் உரிய தடுப்பு முறைகளை மேற்கொண்டால் கண்டிப்பாக இதனை கட்டுப்படுத்தலாம். ஆனால் சில நாடுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது எங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்
Related posts:
வரவுசெலவுத்திட்ட பிரேரணை தொடர்பில் புத்திஜீவிகள் நிலைப்பாடு!
இலங்கைக்கு வருகிறது ஆயுர்வேத தேங்காய் எண்ணெய்!
முதலாவது கொரோனா அலையின் போது 7 வீதமானோர் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர் - மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்...
|
|