கட்டுநாயக்க விமான நிலைய புனரமைப்புப் பணிகள் 75 சதவீதம் பூர்த்தி!

Tuesday, March 7th, 2017

கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையின் புனரமைப்புப் பணிகள் 75 சதவீதம் பூர்த்தியாகியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா  தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புனரமைப்புப் பணிகளை போக்கு வரத்து மற்றும் விமான சேவைகள்  அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா  நேற்று பார்வையிட்டார்.

விமான நிலையத்தின் ஓடு பாதை புனரமைக்கப்படுகிறது. இது 60 முதல் 75 மீற்றர் அகலம் கொண்டதாக புனரமைக்கப்படும். இதன் பின்னர் ஏ-380 ரகத்தைச் சேர்ந்த பாரிய விமானங்களை தரையிறக்கக்கூடியதாக இருக்குமென நிமல் சிறிபால டி சில்வா  அமைச்சர் தெரிவித்தார்.

.புனரமைப்புப் பணிகள் 75 சதவீதம் பூர்த்தியாகியுள்ளன. இவற்றை அடுத்த மாதம் 6 ஆம் திகதிகளுக்குள் பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் இருபது வருட காலம் பிரச்சினையின்றி ஓடுபாதையை பயன்படுத்த முடியமென போக்குவரத்து அமைச்சர் கூறினார்.

Related posts: