கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் நீக்கம்!

Friday, May 10th, 2019

அசாதாரண சூழ்நிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதுகாப்பு நிலைமை சீரடைந்து வரும் நிலையில் விமான நிலையத்தில் விதிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது விமான நிலையத்திற்குள் பிரவேசிக்கும் போதும் அங்கிருந்து வெளியேறுவோரும் வழமை போன்று செயற்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் கிஹான் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

விமான நிலையத்திற்குள் செல்லும் போதும் அங்கிருத்து வெளியேறும் போதும் பொதிகளுடன் நீண்ட தூரம் நடந்து செல்ல நேர்வதால் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பயணிகள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கமைய, நேற்றிரவு முதல் அமுலாகும் வகையில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இனி வழமை போல், பயணிகளின் வாகனங்கள் விமான நிலைய நுழைவாயில் வரை செல்ல முடியும் என அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலை அடுத்து விமான நிலையத்திற்குள் பயணிகள் அல்லாதோர் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: