கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகிலும் பாரிய வெடிகுண்டு செயலிழப்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பாரிய வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டான பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில் இருந்த வெடிகுண்டை இலங்கை விமான படையினர் கண்டுபிடித்துள்ளனர்.மீட்கப்பட்ட வெடிகுண்டு செயழிக்க செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டான பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றில் தற்கொலை குண்டுத்தாக்குல் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
Related posts:
பழைய விலைக்கே எரிபொருள் விற்க வேண்டும் : ஜனாதிபதி
தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள இரண்டாது தொகுதி ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்மு...
இலங்கை அதிபர் சேவையின் தரம் மூன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோருக்கு எதிர்வரும் சனியன்று நியமனம் !
|
|