கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் பயணிகள் தவிப்பு!

Tuesday, April 3rd, 2018

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் அனைத்து ஊழியர்களும் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு கோரி ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணி பகிஷ்கரிப்பு காரணமாக, விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முடங்க ஆரம்பித்துள்ளதாக விமானநிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளமையால் பணி பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக பயணிகள் பெரிதும் சிரமப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts: