கட்டுநாயக்க விமானநிலையத்தில் புதிதாக ஹோட்டல்கள் !

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு ஹோட்டல்களை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே இதற்கான காரணமாகும்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதலான வசதிகளை வழங்குவதற்கும் இதன் மூலம் பயணிகளுக்கு நன்மை கிடைக்கும் என்றும் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் ஈசீஎம் லிப்ரா பய்னேன்ஷியல் குறூப் பர்ஹேட் மற்றும் சிங்கப்பூரின் டீபி ரியல் எஸ்டெட் ஹோல்டின்ஸ் (தனியார்) நிறுவன முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஹோட்டல்களை நிர்மாணித்து பராமரிப்பதற்காக 40 வருட குத்தகை அடிப்படையில் வழங்குவது தொடர்பில் அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Related posts:
மருந்து பொருட்களின் தரம் குறித்து அச்சம் வேண்டாம்!
இம்மாத இறுதியிலிருந்து ஓட்டோக்களுக்கு மீற்றர் பொருத்தும் நடைமுறை!
பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் மடிக்கணனி - பட்டம் பெற்றும்வரை கடன் தொகையை செலுத்த தேவையில்லை - ப...
|
|