கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள்!

கட்டுநாயக்கசர்வதேசவிமானநிலையத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் புதியபாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக இலங்கைவிமானநிலையங்கள் மற்றும் விமானசேவைநிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்பாதுகாப்புஏற்பாடுகள் எதிர்வரும் முதலாம் திகதிமுதல் அமுலுக்குவரவுள்ளதாகவும், இதனூடாகபயணிகள்,விமானங்கள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடனேயே புதியபாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஏற்பாடுகளின் அடிப்படையில் விமானப் பயணியொருவர் தன்னுடன் எடுத்துச் செல்லக் கூடிய திரவங்கள், ஜெல் உள்ளிட்ட பொருட்களின் அளவுகள் மட்டுப்படுத் தப்படவுள்ளதாகவும், அவற்றைக் கொண்டுசெல்லும் கொள்கலன்;கள் திறந்து மூடக்கூடிய 20 – 20 அங்குல பொலித்தீன் பைகளில் அடைக்கப்படவேண்டும் என்றும்,இவ்வாறானபயணப் பொதியையேபயணியொருவர் தன்னுடன்கொண்டுசெல்லமுடியுமென்றும் தெரியவருகின்றது.
அவ்வாறாகபயணியொருவர் கொண்டு செல்லும் பொருட்களின் அளவுகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொருட்களின் கொள்வனவுக்கானர சீதுகளையும் பயணிகள் வைத்திருக்க வேண்டியது அவசியமானதென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
|
|