கட்டுநாயக்கா – கோயம்புத்தூர் இடையில் புதிய வானூர்தி சேவைகள்!
Tuesday, July 18th, 2017
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்திற்கும் தமிழ் நாட்டின் கோயம்புத்தூருக்கும் இடையில் புதிய வானூர்தி சேவைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வாரத்தில் நான்கு நாட்களுக்கு இந்த வானூர்தி சேவைகள் இடம்பெறவுள்ளன.
ஞாயிறு, செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இந்த வானூர்திசேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை, கடந்த 8ஆம் திகதி கொழும்பில் இருந்து வாரனாசிக்கும், 12ஆம் திகதி ஹைதராபாத்திற்கும் புதிதாக வானூர்தி சேவைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிறுவர் தொடர்பான முறைப்பாடுகளில் 40,668 முறைப்பாடுகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை - கோப் குழு ...
உணவு தட்டுப்பாடு ஏற்படாது - விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உறுதி!
நாட்டில் சுமார் 60 வீதமான சிறார்கள் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமை - நீரிழிவு நோய் ஏற்படுவதாக ஆய்வில்...
|
|