கட்டாருக்கான விமான பயணங்களில் மாற்றமில்லை – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!  

Wednesday, June 7th, 2017

டோகா – கட்டார் நாட்டுக்கான விமான பயணங்களில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த கால அட்டவணைக்கு அமைய விமான பயணங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தற்போது எந்த பாதிப்புகளும் இல்லை எனவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது

Related posts: