கட்டாரில் சிறைத்தண்டனை அனுபவித்த 20 இலங்கையர்களுக்கு விடுதலை – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு!

கட்டாரில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 20 இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
புனித ரமழானை முன்னிட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்த பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அபராத தொகை செலுத்தலில் இருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நாளையுடன் நிறைவு!
வாழ்க்கையை இரத்து செய்வதைக் காட்டிலும் நிகழ்வுகளை இரத்துச் செய்வது சிறந்தது – பொதுமக்களிடம் உலக சுகா...
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையிலி அமைச்சரவை...
|
|