கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு மேலுமொரு முக்கிய செய்தி!

Friday, June 16th, 2017

கடந்த 2017 ஜூன் மாதம் 05ம் திகதி கட்டாருடனான அனைத்து விதமான இராஜதந்திர உறவுகளையும் துண்டிப்பதுடன், எல்லைகளை மூடிவிடவும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகள் மேற்கொண்ட தீர்மானத்தை தொடர்ந்து மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் இலங்கையர்களுக்கு தெளிவு படுத்த விரும்புவதாக கொழும்பில் அமைந்துள்ள கட்டார் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையர்கள் உள்ளிட்ட வௌிநாடுகளில் இருந்து கட்டாருக்கு தொழிலுக்காக வரும் எந்தவொரு நபரின் அன்றாட வாழ்வுக்கும் இந்த பிரச்சினை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான நிலையொன்று ஏற்பட்டால் அதற்கு முகங்கொடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எமது அரசாங்கம் முன்னதாகவே மேற்கொண்டிருந்தமையினால் நிலைமை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கொழும்பில் அமைந்துள்ள கட்டார் தூதரகம் குறிப்பிட்டுள்ளது

Related posts: