கட்டாய தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு தளர்வு – சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவிப்பு!

Thursday, July 8th, 2021

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் நபர்கள், கொவிட் தடுப்பூசியின் இரண்டு செலுத்துகைகளையும் பெற்றிருந்தால் அவர்களுக்கு கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தொற்று அல்லாதவர் என உறுதி செய்யப்படும் நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட தேவையில்லை என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டு 14 நாட்களின் பின்னர் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருபவர்களுக்கு, பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்றல்லாதவர் என கண்டறியப்படுபவர்கள் தனிமைப்படுத்தல் இன்றி வெளியேற அனுமதிக்கப்படுவர்.

இதனுடாக, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புகின்றவர்களுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது. எனினும், தொற்று உறுதிசெய்யப்படும் நபர்கள் தனிமைப்படுத்தப்படுவர் எனவும் சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதேவேளை, இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு இந்த நடைமுறை செல்லுபடியாகாது என்றும் தெரிவித்துள்ள சிவில் விமான சேவைகள் அதிகாரசபை இலங்கைக்குள் பிரவேசிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பிரஜைகள் மற்றும் அந்நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள் சென்று திரும்பியவர்கள் இந்த நடைமுறைக்குள் உள்வாங்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பும் அகதி மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை நீக்குவதற்கு டக்ளஸ் தே...
தொலைக்கல்வி முறையில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட முடியாத மாணவர்களுக்கு கிராமிய கற்றல் மையங்களை அமைக்க...
43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் - உத்தேச சட்டமூலத்தினை வர்த்தமானியாக வ...