கட்டாக்காலி நாய்கள் கொலை: குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும் இல்லை – அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க!
Friday, July 21st, 2017
கட்டக்காலி நாய்கள் மற்றும் கால்நடைகளை கொலை செய்வதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும் இல்லை என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பதுளை வாராந்த சந்தையை பொது மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.ஐஃபா விருதுவழங்கல் நிகழ்வு நடைபெற்ற காலப்பகுதியில் கட்டக்காலி நாய்கள் மற்றும் கால்நடைகள் கொல்லப்பட்டன.
ஆனால் தற்போது அவ்வாறான எந்தசெயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.குப்பை முகாமைத்துவம் தொடர்பான முறைமைகளை பொறுத்து கொள்ள முடியாத சிலர் இவ்வாறான பொய் பிரசாரங்களை முன்னெடுத்து செல்வதாகவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புதிய சாதனை !
ஐ.நா. அலுவலகம் சென்றது மே தின ஒத்திவைப்பு!
டெங்கு நோயாளர்களுக்கு தடுப்பூசி - தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளதாக அதன் த...
|
|