கட்டாக்காலி நாய்களால் அவதிப்படும் பொதுமக்கள்!
Tuesday, December 5th, 2017யாழ்.மாவட்டத்திலுள்ளபல பிரதேசங்களில் கட்டாக்காலி நாய்களின் பெருக்கத்தால் உயிரிழப்பு உட்பட பல பாதிப்புக்களை தாம் எதிர்கொள்வதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன் இவ் விடயம் குறித்து உள்ளூராட்சி அமைச்சு கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்.மாவட்டத்திலுள்ளபல பிரதேசங்களில் கட்டாக்காலி நாய்களின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. இதனால் வீதிகளில் பயணிப்போரே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக புன்னாலைக்கட்டுவன், கந்தரோடை, மாகியப்பிட்டி, சண்டிலிப்பாய், ஊரெழு, உரும்பிராய், கோப்பாய், சித்தன்கேணி, வட்டுக்கோட்டை உட்பட வலிவடக்கு மற்றும் வலிகிழக்கு பகுதிகளில் அதிகளவான கட்டாக்காலி நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இப் பகுதிகளில் உள்ள வீதிகளில் பயணிப்பவர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதுடன் நிரந்தர அங்கவீனமும் அடைந்துள்ளனர். உயிர் சேதம் ஏற்படும் அளவுக்கு இந்த நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
மேலும் வீதிகளில் அவற்றின் கழிவுகள் ஆங்காங்கே காணப்படுவதால் சுகாதார சீர்கேடு மற்றும் பொதுமக்களுக்கு கிருமித்தொற்று ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அத்துடன் விவசாய நிலங்கள் இவற்றால் பெரிதும் பாதிப்படைகின்றன.
மேலும் வலிவடக்கில் தற்போது விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அதிகளவான நாய்கள் காணப்படுகின்றன. இராணுவமுகாம்களில் அதிகளவாக வளர்க்கப்பட்ட நாய்கள் தற்போது கட்டாக்காலி நாய்களாக அப் பகுதிகளில் திரிவதால் பொபதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வீட்டில் நாய்களை வளர்ப்பவர்களும் கட்டி வளர்க்காமல் வெளியில் செல்லவிடுவதாலும் வீதியால் செல்வோர் நாய்க்கடிக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே இவ்வாறான பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிக விரைவில் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என பொதுமக்க்ள மற்றும் பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
|
|