கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் – சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வை.ஜெகதாஸ்!

Wednesday, May 1st, 2019

கொடிகாமம் சந்தையினுள் கட்டக்காலி மாடுகள், ஆடுகள் என்பன வருவதால் வியாபாரிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கை துரிதமாக எடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்  வை.ஜெகதாஸ் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் –

கட்டக்காலிகளால் வியாபாரிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவது மட்டுமல்லாது வீதிகளால் வாகனங்களில் பயணிப்போரும் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர். இவ்வாறான பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் சந்தையின் உட்புறத்திலுள்ள மலசலகூடம் பவனைக்கு உதவாத முறையில் தூர்நாற்றத்துடனும் புழுக்களுமாக காணப்படுகிறது. இதனால் சந்தைக்கு வரும் மக்கள் பெரிதும் பாதிக்கப்டுவதை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் நாட்டின் தற்போதைய நிலைய கருத்தில் கொண்டு வீதிகளில் கட்டி வைக்கப்படும் குப்பைகளை தேங்க விடாமல் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  அவர் வலியுறுத்தினார்.

Related posts: