கட்டண திருத்தம் தொடர்பில் பேருந்து தொழிற்சங்கங்களுக்கும் போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல்!
Monday, January 9th, 2023தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பேருந்து சங்கங்களுக்கு இடையில் பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அண்மைய டீசல் விலைக் குறைப்புடன் தொடர்புடைய பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பான தமது நிறுவனத்தின் பரிந்துரைகள் இந்தக் கலந்துரையாடலின் உண்மைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்தார்.
எனினும், அண்மைய டீசல் விலை குறைப்புடன் ஒப்பிடுகையில், பஸ் கட்டணத்தை திருத்த முடியாது என தனியார் பேருந்து சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இது தொடர்பான விபரங்களை அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.
இன்றைய கலந்துரையாடலில் பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் பல யோசனைகள் முன்வைக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தார்.
பேருந்துக் கட்டணங்கள் சிறிதளவு குறைக்கப்படும் போது பயணிகளுக்கு நன்மையை வழங்கும் வகையில் இலத்திரனியல் கட்டண அட்டையை அறிமுகப்படுத்துவது அத்தியாவசியமானது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|