கட்டணத்தை அதிகரிக்குமாறு முன்வைத்த கோரிக்கைக்கு உறுதியான பதில் கிடைக்காவிடின் போராட்டம் – தனியார் பாரவூர்தி உரிமையாளர்கள் சங்கம்!

Monday, June 11th, 2018

ஏரிபொருள் விலை அதிகரிப்புடன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்குமாறு தாம் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் உறுதியான பதில் கிடைக்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்படப்போவதாக இலங்கை கனிய எண்ணெய் தனியார் பாரவூர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கனிய எண்ணெய் கூட்டுத்தாபன தலைவருடன் இது தொடர்பில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்கு பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் இணை செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts: