கட்டணங்களை செலுத்தும் புதிய முறை தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை பொதுமக்களுக்கான அறிவிப்பு!

Sunday, June 5th, 2022

தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை பொதுமக்களுக்கான அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

பொதுமக்கள் தத்தமது கட்டணங்களை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்வதற்கு தங்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நீர் கணக்கு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை 07193 99999 என்ற எண்ணுக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

நீர் கட்டணங்களை அச்சிடுவதற்கான கடதாசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையின் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், அடுத்த 3 மாதங்களுக்கு நீர் கட்டணங்களை அச்சிடுவதற்கான கடதாசிகள் கையிருப்பில் உள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் வர்த்தகப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

00

Related posts: