கட்டணங்களை குறையாது – முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் !
Friday, December 27th, 2019எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து முச்சக்கர வண்டி பயணக்கட்டணத்தை குறைப்பதற்கு தாம் தயாராக இல்லையென அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி எரிபொருள் மானியம் பெற்று அதன் பயனை பயணிகளுக்கு வழங்கவே தாம் எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து முச்சக்கர வண்டி பயணக்கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சுய தொழில் தேசிய முச்சகரவண்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கமும் கட்டணத்தை குறைக்குமா என்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் சுதில் ஜயருக் இதனைக் கூறியுள்ளார்.
Related posts:
அனுமதி அட்டைகள் கிடைக்காதவர்கள் முறையிடவும்!
மார்ச் 11ஆம் திகதி கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா !
அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!
|
|