கட்டணங்களை குறைக்குமாறு கோரிக்கை!

Friday, September 16th, 2016

அலைபேசி அழைப்பு மற்றும் இணைய பாவனைக்கான தரவுக் கட்டணத்தை குறைக்குமாறு சோஷலிச இளைஞர் ஒன்றியம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம் காரணமாக அழைப்பு மற்றும் இணைய தரவுக் கட்டணம் என்பன 100க்கு 50 சதவீதமளவில் அதிகரிக்கப்படும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அழைப்பு மற்றும் இணைய பாவனைக்கான தரவுக் கட்டணங்களுக்கு இவ்வாறு வரி அதிகரிப்பது நாட்டிளுள்ள இளைய சமூதாயத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாரதூரமான விடயம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

201608240847428736_mobile-application-lesson-by-studying-the-new-proposal_SECVPF-615x330

Related posts: