கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு எமது மாவட்டத்திற்கு புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது – அகிலன்

Sunday, May 8th, 2016

கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு உந்துதலை அளித்துள்ளதுடன் கட்சியின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எமக்க புத்துணர்ச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதுடன் கட்சியின் செயற்பாடுகளை எமது மாவட்டத்ததில் வளர்ச்சியடைய செய்யமுடியும் என்ற நம்பிக்கையையும் ஏற்பட்டுள்ளது.

கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டு அதற்குரிய நடைமுறைச்சாத்தியமான திட்டங்களை வகுத்து  அவற்றை மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்துவோமானால் அது எமது அரசியற் பயணத்திற்கு ஒரு புத்தாக்கத்தை கொடுக்கும்

அந்தவகையில் தேசிய எழுச்சி மாநாடு எம்மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், எமது கட்சி மிகப்பெரிய மக்கள் சக்திகொண்ட கட்சியாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்காகப் ஜனநாயக வழிமுறையில் போராடும் ஒரு சிறந்த தலைமைத்துவ வழிகாட்டலை கொண்ட கட்சி என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த வழிகாட்டலூடாக அம்பாறை மாவட்டத்தை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டுவர கட்சியின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்த்திருப்பதாக கட்சியின் அம்பாறை மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் அகிலன் தெரிவித்தார்.

494ec843-04a5-4d0f-8888-92498f003e53

Related posts: