கட்சித் தலைவர்கள் – சபாநாயகர் இடையே முக்கிய சந்திப்பு !

Friday, July 20th, 2018

தேர்தலை நடத்துவது தொடர்பில் கட்சித் தலைவர்களுடனான முக்கிய சந்திப்பொன்று இன்று(20) நடைபெறவுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்திருந்தார்.

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு வருவதாக ஒரு கட்சியின் மீது மட்டும் குற்றச்சாட்டை சுமத்த முடியாது எனவும், தேர்தலைப் பிற்போடுமாறு எந்தவொரு கட்சியும் வேண்டுகோள் விடுக்கவில்லையெனவும் சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

பொதுசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் பெறப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே தேர்தல் ஒன்றை நடத்தாமல் பிற்போட முடியும் எனவும், அவ்வாறின்றி, அரசாங்கத்துக்கு தேர்தலை உரிய காலத்தில் நடாத்தாமல் ஒத்திப்போட முடியாது என ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தனவின் வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts: