கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் தீர்மானங்கள் எதுவுமின்றி முடிவுக்கு!

Tuesday, January 30th, 2018

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு முன்பு நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கான கட்சித் தலைவர்களின்கலந்துரையாடல் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கலந்துரையாடலில் சபாநாயகர் பிரதமருடன் கலந்துரையாடிய பின்னர் அடுத்த கலந்துரையாடல் தொடர்பான திகதியை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை தேர்தலுக்கு முன்பாக  கூட்டுவது சிறந்ததென பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமையவே இன்று(30) கட்சித் தலைவர்களின்கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: