கட்சிச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, February 12th, 2018

மேலதிக பட்டியலில் தமது கட்சிகளுக்கு கிடைத்துள்ள ஆசனங்களுக்காக நியமிக்கப்படவுள்ள பிரதிநிதிகளின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்குமாறு குறித்த கட்சிகளின் செயலாளர்களுக்கு இன்று(12) அறிவிக்கவுள்ளது.

தொகுதிவாரியாக வெற்றி பெற்றுள்ள உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானியில் வெளியிடுவதற்காக மேலதிக பட்டியல் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் பெயர் பட்டியலும் அதில் உள்ளடக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மேலதிக பட்டியலில் வேட்பாளராக போட்டியிட்ட உறுப்பினர்களின் பெயர்கள் மாத்திரமே மேலதிக பட்டியலில் பெயரிடப்பட வேண்டும் என அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்தது.

எவ்வாறாயினும் , தொகுதிவாரியாக வெளியான தேர்தல் முடிவுகள் 14ம் திகதி தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


தொழில் முயற்சியாளர்களுக்கு வங்கிகள் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் துரித பொருளாதார அபிவிருத்தியை அடையம...
இலங்கையில் 6 நாட்களில் 54 பேர் கோவிட் தொற்றால் வீடுகளில் மரணம் - பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேர...
அடுத்த மூன்று நாட்களுக்குள் எரிபொருளுக்கு வரிசையில் நிற்கும் நிலை முற்றுப்பெறும் - மின்சக்தி மற்றும்...