கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு காலக்கெடு!

Monday, April 12th, 2021

2019 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகளை முன்வைக்குமாறு பிரதான நான்கு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 76 அரசியல் கட்சிகளில் 72 கட்சிகள் 2019 ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட தமது நிதிநிலை அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளதாக ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பிக்காத 4 கட்சிகளும் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் அவற்றைச் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு சமர்ப்பிக்காவிடின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து அந்த கட்சிகள் நீக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, குறித்த நான்கு கட்சிகளுக்கும் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்

Related posts: