கடைகளில் போலிப் பருப்பு : பொதுமக்களே அவதானம்!

Saturday, August 4th, 2018

நிறமூட்டப்பட்ட தரமில்லாத பருப்பு வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளதாகப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான தரமற்ற பருப்பு வகைகள் இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பருப்பைக் கழுவும் போது சிவப்பு நிறமாக மாறுவதுடன் இந்த பருப்பை வேக வைக்க வழமையை விட கூடுதலான நேரம் எடுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அந்தச் சங்கம் இவ்வாறான பருப்பு வகை விற்பனை செய்பவர்களை இனங்காணுமிடத்து பிரதேசத்தில் உள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு முறையிடுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

Related posts: