கடைகளில் துணியால் தயாரிக்கப்படும் முகக்கவசம் (mask) பயன் படுத்தாதீர்கள் – கொரோனா தொற்று ஏற்படும் அபாயம்! வைத்தியர்!

Thursday, March 26th, 2020

முக கவசம்(mask) குறித்த சிறந்த விளக்கம் ஒன்றை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் மதனழகன் அவர்கள் வழங்கியுள்ளார்.

அதாவது சாதாரணமாக கடைகளில் துணியால் தயாரிக்கப்படும் முக கவசம் ( mask) கொரோணா வைரஸ் தொற்று தாக்கத்தில் இருந்து பாதுகாக்க கூடியவை அல்ல.

அது ஈரப்பதனை உறிஞ்சக் கூடியதாக உள்ளதால் அதன் ஊடாக வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவத்திற்காக தயாரிக்கப்பட்ட முக கவசங்களை அணிவதே பாதுகாப்பானது அதில் மறுபக்கம் ஈரப்பதனை தடுப்பதற்கான பாதுகாப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே வீதிகளில் தற்காலிகமாக விற்பனை செய்யும் மாஸ்க் அணிவதால் எந்த பயனும் இல்லை என்று கூறப்படுகிறது.

Related posts: