கடும் வெப்பம் – யாழில் மற்றுமொருவர் உயிரிழப்பு!

Saturday, March 30th, 2019

நாட்டில்  தற்போது நிலவும் கடும் வரட்சி காரணமாக யாழ்ப்பாணத்தில் மற்றுமொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

யாழ்.தல்லையப்புலம், கரவெட்டியைச் சேர்ந்த 67 வயதான கார்த்திகேசு இராசதுரை என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில், கடும் வெப்பத்தால் மயங்கி வீழ்ந்துள்ளார்.

எனினும் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இலங்கை முழுவதும் கடும் வெப்பமான காலநிலை நிலவி வருவதாக வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்து வருகிறது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் கடும் வெப்ப நிலை காரணமாக இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடும் வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அதிக நீர் அருந்துமாறும், மதிய வேளையில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் சுகாதார துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts: