கடும் வெப்பம் – யாழில் ஒருவர் உயிரிழப்பு!

கடும் வெப்பம் காரணமாக நேற்றுமுன்தினம் புதன்கிழமை குடும்பத்தலைவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த ஜீவகடாட்சம் கஜேந்திரன் (வயது-52) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கூலித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட இவர் நேற்றுமுன்தினம் கொளுத்தும் வெயிலில் கட்டட அமைப்புப் பணியில் வேலைசெய்துகொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.
அவர் உடனடியாகப் பருத்தித்துறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
புதிதாக 25 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் நியமனம்!
புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழ்.போதனா வைத்தியசாலையில் திறப்பு!
தொடர் போராட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் –அமைச்சர் வெளியிட்ட தகவல்!
|
|