கடும் வறட்சி: 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் குடிநீர் இல்லாமல் சிரமம்!

Sunday, June 16th, 2019

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் சுமார் 500,000 பேர் குடிநீர் இல்லாமல் சிரப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்காரணமாக விவசாய அழிவு ஏற்பட்டு வாழ்வாதார இழப்பு மற்றும் உணவு பற்றாக்குறையாலும் பெருமளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்திருந்தாலும், அது குளங்கள், நீராதாரங்கள் நிரம்ப போதுமானதாக இருக்கவில்லை.

பல இடங்களில் குடிநீர் இல்லாமல் காணப்படகின்றது. அன்றாட தேவைகள், விவசாயம், கால்நடைகளிற்கான நீர் இல்லாமல் பெரும் இயற்கை பேரிடரை இலங்கையும் எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாகணங்களாக வடக்கு, கிழக்கு, தெற்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மன்னார் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தகவலின்படி, மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலர் பிரிவுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இங்கு 62,000 மக்களிற்காக 145,000 லீற்றர் நீரை அனர்த்த முகாமைத்துவ பிரிவு வழங்கி வருகிறது. இதே நிலைமை இன்னும் 20 நாட்களிற்கு நீடித்தால், உலருணவு வழங்க வேண்டிய அபாயம் எழுந்துள்ளதாகதோன்றும் என அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

குடிநீர் தட்டப்பாட்டை போக்க குழாய்க்கிணறுகளை பலர் ஆழமாக்கி வருவதாகவும், இதனால் நிலத்தடி நீர் உவரடையும் போக்கு மன்னாரில் அதிகரித்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களும் கடுமையான வறட்சியை எதிர்கொண்டுள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவில் கால்நடைகள் குடிநீரில்லாமல் உயிரிழக்க ஆரம்பித்துள்ளன. காட்டு விலங்குகள் குடிநீர் தேடி கிராமங்களிற்குள் புகுவது அதிகரித்துள்ளது.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் எட்டு பிரதேசசெயலர் பிரிவகளில் 20,000 பேர் குடிநீர் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அதுமட்டுமலாமல் பொலன்னறுவை , அநுராதபுரம், காலி மாவட்டங்களிலும் மக்களிற்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts: