கடும் வறட்சி – வடக்கில் 99,191 பேர் பாதிப்பு!

Thursday, April 18th, 2019

தற்போது நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக வட மாகாணத்தில் 28,950 குடும்பங்களை சேர்ந்த 99,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மன்னார் பிரதேசத்தினை சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மன்னார் மாவட்டத்தில் 53,569 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

யாழ் மாவட்டத்தில் 33,501 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6,296 பேரும், கிளிநொச்சியில் 5,720 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: