கடும் வறட்சி – யாழில் 7311 குடும்பங்கள் பாதிப்பு!

Wednesday, April 3rd, 2019

நாட்டில் நிலவும் கடும் வறட்சியின் தாக்கத்தால் யாழ். மாவட்டத்தில் மட்டும் 7311 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்தமுகாமைத்துவபிரிவு அறிவித்துள்ளது.

யாழ். மாவட்டத்தின் கரையோரப்பிரதேசங்களில் வசிப்பவர்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என அனர்த்தமுகாமைத்துவபிரிவின் தகவல்கள் தெரிவித்துள்ளன. நெடுந்தீவு பிரதேசசெயலர் பிரிவின் 1031 குடும்பங்களைச் சேர்ந்த 3071 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலணைபிரதேசசெயலர் பிரிவில் 2798 குடும்பங்களைச் சேர்ந்த 9642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பிரதேசசெயலர் பிரிவில் 2422 குடும்பங்களைச் சேர்ந்த 7848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று வடமராட்சிகிழக்கு, மருதங்கேணி பிரதேசசெயலர் பிரிவின் கீழ் 1060 குடும்பங்களைச் சேர்ந்த 4630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் திரட்டப்பட்டு, அவர்களுக்கான உதவித்திட்டங்கள் வழங்குவதற்கான நடவடிக்கையை யாழ். மாவட்டச் செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வறட்சியால் பாதிக்கப்பட்டபிரதேசசெயலர் பிரிவுகளில் நீர் விநியோகம் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related posts: