கடும் வறட்சி: நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் விநியோக மற்றும் வடிகால் அமைப்பு சபை!

குடி நீரை அத்தியாவசிய தேவைகளைத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்த வேண்டாம் என்று நீர் விநியோக மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாளாந்தம் விநியோகிக்கக்கூடிய ஆக கூடிய நீர் விநியோகிக்கப்படுவதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு சபையின் கொழும்பு மேற்கு மற்றும் மத்திய பிரிவு பிரதிப் பொது முகாமையாளர் ரஞ்சித் சமரசிங்க பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்பொழுது பயன்படுத்தப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. பகல் வேளையில் மேட்டு நிலப்பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடனான நீர் விநியோகிக்கம் இடம்பெறுகின்றது.
இவ்வாறான பகுதிகளில் இரவு நேரத்தில் நீரை விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக நீரை சேமித்து பயன்பத்துவது மிகவும் பொருத்தமானதாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
புதிய பேருந்துக் கட்டண விவரம் வெளியானது!
விளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும்போது வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கான அவசியம் குறைவடையும் - பிரதமர...
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது!
|
|