கடும் வறட்சி: உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு!

Monday, September 24th, 2018

 

வறட்சியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்குத் தேவையான நிதி நாளை முதல் வழங்கப்படும் என்று இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக, அனுராதபுரம் மாவட்ட செயலகத்திற்கு நிதியில் ஒரு தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிவாரணப் பொருட்கள் சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விநியோகிக்கப்படவுள்ளன.

உலர் உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 21 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts: