கடும் வரட்சி – 5 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

Saturday, July 13th, 2019

கடும் வரட்சியான காலநிலை காரணமாக 08 மாவட்டங்களை சேர்ந்த 5 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, புத்தளம், திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பகுதிகளை சேர்ந்த மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவு செய்வதற்காக 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி, அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Related posts: