கடும் வரட்சி: 06 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு – இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்!

Thursday, August 1st, 2019

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வரட்சியினால் சுமார் 600,000 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் 9 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 21,094 குடும்பங்களை சேர்ந்த 70,628 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 24,285 குடும்பங்களை சேர்ந்த 79,984 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 18,074 குடும்பங்களை சேர்ந்த 63,115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதே வேளை பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரம் உள்ளிட்ட பல குளங்களில் தற்பொழுது நீர் மட்டம் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts: