கடும் வரட்சி : யாழில் செவ்விளநீர் விலை அதிகரிப்பு!

Thursday, May 23rd, 2019

யாழ்ப்பாணத்தில் செவ்விளநீரின் விலை திடீரென அதிகரித்துள்ளது.

சில நாட்களாக 120 ரூபா வரைக்கும் விற்கப்பட்ட செவ்விளநீர் ஒன்று தற்போது 150 ரூபா வரைக்கும் விற்கப்படுகிறது.   தெற்கிலிருந்து செவ்விளநீர் வந்து சேராததால்தான் இவற்றின் விலை அதிகரிப்புக்குக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

தற்போதைய கடும் வரட்சியால் செவ்விளநீரின் நுகர்வும் அதிகரித்துள்ளது. அதனைவிட கோவில்களில் திருவிழாக்கள் ஆரம்பமாகி இடம்பெற்று வருவதாலும் இவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளன. இந்த நிலையில் குடாநாட்டு செவ்விளநீரின் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது. செவ்விளநீரின் விலை அதிகரிப்பால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

Related posts: