கடும் மழை : வடமராட்சி கிழக்கு வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தின் பல பாகங்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையில் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வடமராட்சி கிழக்கு பிரதேசத்தின் மக்கள் வாழ்விடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகின்றது.
இதனால் குறித்த பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதுடன் பெரும்போக நெற்செய்கையும் அழியும் நிலை காணப்படுவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே யாழ்ப்பாணத்தின் வலிகாமம் மற்றும் தீவகப் பகுதிகளிலும் தென்மராட்சிப் பிரதேசத்திலும் கடும் மழை தொடர்வதால் மக்கள் தமது இயல்பு நிலையை இழந்துள்ளனர்.
நாடு முழுவதும், விசேடமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|